கேபிஆர் ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்ற 21 மாணவர்கள் சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மத்திய அரசுப் பணியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட 24 வகையான பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது.
முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக தேர்வு நடைபெறுகிறது. இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூன் 2 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.
இத்தேர்வை கோவையில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். முதல்நிலை தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதில் கோவை, கேபிஆர் ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சிப் பெற்ற எஸ்.கார்த்திகேயன், பி.பிரபினா, வி.எஸ்.நாராயண சர்மா உள்பட 21 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்றவர்களை கேபிஆர் ஐஏஎஸ் அகாதெமி மையத்தின் மேலாண்மை இயக்குநர் கே.பி.டி.சிகாமணி, பயிற்சி இயக்குநர் மு.ராஜ்குமார் ஆகியோர் பாராட்டினர்.