வால்பாறையில் இலவச தொழில்நுட்ப பயிற்சி மையத்தை பொள்ளாச்சி எம்.பி.யும், மையத்தின் ஒருங்கிணைப்பாளருமான கு.சண்முகசுந்தரம் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார். வால்பாறை குமரன் சாலையில் தொடங்கப்பட்டுள்ள இம்மையத்தில் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி இலவசமாக அளிக்கப்படும். இதேபோல இலவச கணினி பயிற்சியும் அளிக்கப்படும்.
விழாவில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ், நகர பொறுப்பாளர் பால்பாண்டி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.