கோயம்புத்தூர்

பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ. படிப்புக்கு மாணவர் சேர்க்கை

12th Jul 2019 07:42 AM

ADVERTISEMENT

பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ., பி.ஜி.டி.சி.ஏ. படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பல்கலைக்கழகத்தின் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் 2019-20 ஆம் கல்வி ஆண்டுக்கான எம்.சி.ஏ., எம்.சி.ஏ. (நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்க்கை), பி.ஜி.டி.சி.ஏ. போன்ற பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில், எம்.சி.ஏ., எம்.சி.ஏ. லேட்டரல் என்ட்ரி படிப்புகளில் சேர டான்செட் அல்லது பாரதியார் பல்கலைக்கழக கணினி பயன்பாட்டியல் துறையின் நுழைவுத் தேர்வை எழுதியிருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை மாணவர்கள் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ ரூ.400 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் ரூ.200 செலுத்த வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் ரூ.60-க்கான தபால் தலையை அஞ்சல் உறையில் ஒட்டி சுய முகவரியை எழுதி, விண்ணப்பத்துக்கான வரைவோலையை இணைத்து கணினி பயன்பாட்டியல் துறைக்கு அனுப்ப வேண்டும். இணையதளம் மூலமாகவும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக கணினி பயன்பாட்டியல் துறையை நேரிலோ, 0422 2428360, 97900 04351 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT