கோயம்புத்தூர்

ஜி.ஆர்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில்  டெங்கு தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம்

12th Jul 2019 07:49 AM

ADVERTISEMENT

கோவில்பாளையம் ஜி.ஆர்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோவில்பாளையம் ஜி.ஆர்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கம் சார்பில் டெங்கு தடுப்பு குறித்து விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. 
கூட்டத்துக்கு கல்லூரி முதல்வர் சங்கரசுப்ரமணியன் தலைமை வகித்தார். 
கோவை டெங்கு தடுப்பு சுகாதார கண்காணிப்பாளார் கண்ணப்பன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ் செல்வகிரி ராயப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்ககள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினர். மேலும் டெங்கு இல்லாத மாநிலம் உருவாக்குவோம் என்று உறுதிமொழி எடுத்தனர். 
இந் நிகழ்சியில் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் விஜயகுமார், பாபு, இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தாமரைச்செல்வி மற்றும்  ஆசிரியர்கள்,  மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT