கோயம்புத்தூர்

சமையல் செய்யும்போது தீப்பிடித்து இளைஞர் பலி

12th Jul 2019 07:47 AM

ADVERTISEMENT

சூலூர் அருகே சமையல் செய்யும்போது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த இளைஞர் உயிரிழந்தார்.
சூலூரை அடுத்த சிந்தாமணிபுதூர் அருகே சத்தியநாராயணபுரத்தில் வசிப்பவர் பிரகாஷ் (34). இவர் கடந்த 7ஆம் தேதி தனது வீட்டில் சமையல் செய்ய அடுப்பைப் பற்றவைத்துள்ளார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக அவரது உடையில் தீப்பற்றி உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. இவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு வீட்டுக்கு வெளியே இருந்த அவரது மனைவி அனிதா வீட்டுக்குள் வந்து பார்த்தபோது தீக்காயங்களுடன் இருந்த பிரகாஷை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பிரகாஷ் வியாழக்கிழமை உயிரிழந்தார்.  
இதுகுறித்து சூலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT