கோயம்புத்தூர்

கல்லூரி மாணவர்களுக்கு பட்ஜெட் குறித்து விளக்கம்

12th Jul 2019 07:47 AM

ADVERTISEMENT

கல்லூரி மாணவர்களுக்கு தற்போது அறிவிக்கப்பட்ட பட்ஜெட் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
வால்பாறை அரசுக் கல்லூரியில் பட்ஜெட் விளக்க கூட்டம் நடைபெற்றது. 
கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மகாலட்சுமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரி உயர்வு, குறைப்பு மற்றும் புதிதாக விதிக்கப்பட்ட வரிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதேபோல, பட்ஜெட் குறித்த மத்திய நிதியமைச்சரின் பேச்சும் ஒளிபரப்பப்பட்டது. 
பேராசிரியர்கள் பெரியசாமி, செல்வகுமார், அரவிந்தன், சங்கர் உள்பட வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டுத் துறை முதுகலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT