கோயம்புத்தூர்

ரயில்வே தொழிலாளர்கள் போராட்டம்

4th Jul 2019 07:24 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் ரயில்வே தனியார்மயமாக்கல் முடிவை எதிர்த்து சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் கோவை, போத்தனூர் கிளை சார்பில், கோவை குட்ஷெட் சாலையில் உள்ள மெக்கானிக்கல் பணிமனை முன்பு புதன்கிழமை கருப்பு பேட்ஜ் அணியும் போராட்டம் நடைபெற்றது. 
கோவை தலைமைக் கிளை செயலாளர் ஜோன், தலைவர் சங்கர் ஆகியோர் தலைமை வகித்தனர். போத்தனூர் கிளை துணைச் செயலாளர்கள் அண்ணாமலை, சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில்  ரயில்வே தனியார்மயமாக்கல் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும், 55 வயது நிரம்பிய 30 ஆண்டு சர்வீஸ் முடித்த 3 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும், உற்பத்தி மற்றும் பராமரிப்புப் பணிகளை தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் கோஷங்கள் எழுப்பினர்.  இதில் சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியனைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT