கோயம்புத்தூர்

மாணிக்கவாசகர் குருபூஜை விழா

4th Jul 2019 07:26 AM

ADVERTISEMENT

அன்னூர் தமிழ்ச் சங்கம் சார்பில் மாணிக்கவாசகர்  குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.
அன்னூர் தமிழ்ச் சங்கம் சார்பில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா நிகழ்ச்சி சங்கத் தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவாசகம் முழுமையாக வாசிக்கப்பட்டது.
இதில் 80 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற ஆசியரியர் நாகப்பன், இலக்கியச்  சொற்பொழிவாளர் ராமதாஸ் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.  
தமிழ்ச் சங்கச் செயலாளர் அன்னாசிகுட்டி மற்றும் அன்னூர், புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT