அன்னூர் புதிய வட்டாட்சியராக சந்திரா திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அன்னூர் வட்டாட்சியராக பணியாற்றி வந்த வசந்தாமணி கடந்த சனிக்கிழமை பணி ஓய்வுபெற்றார். இதையடுத்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உணவுப் பொருள் வழங்கல் தனி வட்டாட்சியராக பணியாற்றி வந்த சந்திரா, அன்னூர் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அலுவலர்கள், ஊழியர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.