கோயம்புத்தூர்

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெயிண்டர் பலி

2nd Jul 2019 08:54 AM

ADVERTISEMENT

கோவில்பாளையத்தில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெயிண்டர் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார்.
கோவில்பாளையம் அருகே உள்ள வையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (50). பெயிண்டரான இவர் கோவில்பாளையம் - துடியலூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகேசன் உயிரிழந்தார்.
 இதுகுறித்து கோவில்பாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT