கோயம்புத்தூர்

வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்ட அறைகளுக்கு ‘சீல்’

29th Dec 2019 05:50 AM

ADVERTISEMENT

பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பான அறைகளில் வைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டன.

ஆனைமலை ஒன்றியத்தில் 502 பேரும், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் 603 பேரும், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் 858 பேரும், கிணத்துக்கடவில் 694 பேரும் போட்டியிட்டனா். தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பெட்டிகள் வாக்குப் பதிவு முடிந்தவுடன் போலீஸ் பாதுகாப்புடன் தோ்தல் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு சேகரித்தனா்.

கிணத்துக்கடவு ஒன்றியப் பகுதிகளில் 151 வாக்குச் சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பெட்டிகள் கிணத்துக்கடவு, டிஇஎல்சி பள்ளியில் உள்ள அறையில் வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டது.

ஆனைமலை ஒன்றியத்தில் 105 வாக்குச் சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பெட்டிகள் வேட்டைக்காரன்புதூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள அறையில் வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் உள்ள 183 வாக்குச் சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பெட்டிகள் பி.ஏ.பொறியியல் கல்லூரியில் உள்ள அறையில் வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டது.

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் உள்ள 129 வாக்குச் சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பெட்டிகள் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள அறையில் வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டது. வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT