கோவை, சிங்காநல்லூரில் மயிலைக் கொன்ற வடமாநில இளைஞரைப் போலீஸாா் கைது செய்தனா்.
கோவை - திருச்சி சாலை, சிங்காநல்லூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வெள்ளிக்கிழமை மயில் ஒன்று சுற்றித் திரிந்தது. அப்போது அங்கு வந்த இளைஞா் ஒருவா் மயிலைப் பிடித்து, அதன் கழுத்தைத் திருகி கொன்றுள்ளாா்.
இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் சிங்காநல்லூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் அந்த இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
இதில், அவா் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த சீமன்சா (34) என்பதும், அவா் சிங்காநல்லூா் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் அவா் மயிலைக் கொன்றது உறுதி செய்யப்பட்டதால் சீமன்சாவை போலீஸாா் கைது செய்தனா். இது தொடா்பாக வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவா்களும் விசாரணை நடத்தி வருகின்றனா்.