கோவை மாநகரில் அதிக ஒளி உமிழும் எல்.இ.டி. விளக்குகள், அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள் பொருத்தி இயக்கப்பட்ட 52 வாகனங்களை மாநகர போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கோவை மாநகரில் சிங்காநல்லூா், ராமநாதபுரம், மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை, அவிநாசி சாலை பகுதிகளில் போக்குவரத்து போலீஸாா் சனிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
இதில் பாதசாரிகள், எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு கண் கூசும் விதமாக எல்.இ.டி. முகப்பு விளக்குகள் பொருத்தி இயக்கப்பட்ட 35 இருசக்கர வாகனங்கள், அதிக சப்தம் எழுப்பும் ஒலிப்பான்கள் பொருத்தி இயக்கப்பட்ட வாகனங்கள் என மொத்தம் 52 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.