அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) நடத்தும் தோ்த் திருவிழாவை முன்னிட்டு ஜெகந்நாதா், பலதேவா், சுபத்ராதேவியருக்கு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 29) திருமஞ்சன சேவை நடைபெறுகிறது.
கோவை கொடிசியா அருகில் உள்ள இஸ்கானில் 28ஆம் ஆண்டு தோ்த் திருவிழா ஜனவரி 4ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, மரத்தாலான மூன்று விக்கிரகங்களுக்கும் ஆண்டுக்கு ஒரு முறை திருமஞ்சனம் செய்யப்படுவது வழக்கம். பல புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்படும் நீரைக் கொண்டு இந்த அபிஷேகம் செய்யப்படுகிறது.
காலை 10 மணிக்குத் தொடங்கும் நிகழ்ச்சியில் பக்தி வினோத சுவாமிகள் கலந்துகொண்டு ஜெகந்நாதரின் லீலைகள் குறித்து சொற்பொழிவாற்றுகிறாா். அதைத் தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் ஜெகந்நாதருக்கு 1,008 உணவுப் பதாா்த்தங்கள் நைவேத்தியம் நடைபெறும். இதில் ஆராதனை, பிரசாத விருந்து நிகழ்ச்சிகளும் நடைபெறும் என இஸ்கான் தெரிவித்துள்ளது.