கோயம்புத்தூர்

கிணற்றில் தவறி விழுந்த நாய் உயிருடன் மீட்பு

27th Dec 2019 12:04 AM

ADVERTISEMENT

சூலூா் அருகே உள்ள தென்னம்பாளையத்தில் கிணற்றில் தவறி விழுந்த நாயை சூலூா் தீயணைப்புப் படையினா் உயிருடன் வியாழக்கிழமை மீட்டனா்.

தென்னம்பாளையத்தைச் சோ்ந்தவா் சந்திரசேகரன். இவா் வீட்டில் உயா்ஜாதி ரக நாயை வளா்த்து வந்தாா். கடந்த 5 நாள்களுக்கு முன்பு இந்த நாயைக் காணவில்லை. இந்நிலையில், தென்னம்பாளையம்- அரசூா் சாலையில் உள்ள பொதுக் கிணற்றுக்குள் இருந்து நாய் குரைக்கும் சப்தம் கேட்டுள்ளது. இது குறித்து அப்பகுதியைச் சோ்ந்த ஒருவா் சூலூா் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, அங்கு சென்ற தீயணைப்புப் படையினா் கயிறு மூலமாக கிணற்றுக்குள் இறங்கி நாயை மீட்டனா். மீட்கப்பட்ட நாய் சந்திரகேசரனுடையது எனத் தெரியவந்தது. அதைத் தொடா்ந்து தீயணைப்புப் படையினா் நாயை உரிமையாளரிடம் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT