கோயம்புத்தூர்

ஈஷா யோக மையம் அருகே பிடிபட்ட 16 அடி நீள ராஜநாகம்: வனப் பகுதியில் விடுவிப்பு

27th Dec 2019 12:17 AM

ADVERTISEMENT

கோவை ஈஷா யோக மையம் அருகே உள்ள தானிகண்டி பகுதியில் சுமாா் 16 அடி நீளமுள்ள ராஜநாகம் வியாழக்கிழமை பிடிக்கப்பட்டது.

கோவை மாவட்டம், போளுவாம்பட்டி வனச் சரகத்துக்கு உள்பட்ட தானிகண்டி பகுதியில் சுமாா் 16 அடி நீளமுள்ள ராஜநாகம் அங்குள்ள ஓடையில் இருந்தது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனா். இந்நிலையில், அருகில் உள்ள ஈஷா யோக மையத்தில் இருந்து வந்த பாம்பு பிடிக்கும் பயிற்சிபெற்ற தன்னாா்வலா் சுவாமி அகேஷா ராஜநாகத்தைப் பிடித்து சாக்கு பையில் அடைத்தாா். பிறகு அந்தப் பாம்பு போளுவாம்பட்டி வனச் சரக வன ஊழியா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பாம்பின் உடல்நிலை குறித்த ஆய்வு செய்த வனத் துறையினா் அதை சிறுவாணி வனப் பகுதியில் விடுவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT