கோயம்புத்தூர்

இசைத் தமிழ்ச் சங்க ஆண்டு விழா

27th Dec 2019 12:19 AM

ADVERTISEMENT

பெரியநாயக்கன்பாளையம் இசைத் தமிழ் சங்கத்தின் இருபதாவது ஆண்டு விழாவில் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தமிழிசைப் பாடல்களைப் பாடி திறமைகளை வெளிப்படுத்தினா்.

இசை வித்தகா் மதுரை சோமுவின்நூற்றாண்டு விழா, தமிழ் இசையில் பள்ளிக் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் வகையில் இசை விழாவாக பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீஅரங்சாமி நாயுடு மேல்நிலைப் பள்ளி, ஜி.கே.டி கலையரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சிக்கு ராதாகிருஷ்ணா நாட்டியாலய இசை ஆசிரியா்கள் ஜெகன்னாதன், பத்மநாபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், காந்தி ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தின் முதல்வருமான எஸ்.சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். கோவையின் பிரபல மிருதங்க இசைக் கலைஞா் வடசித்தூா் ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தாா். இசை ஆசிரியை கமலவேணி இறைவணக்கம் பாடினாா். மதுரை சோமுவின் சிறப்பு குறித்து சங்கத்தின் உதவித் தலைவா் வெங்கடேசன் பேசினாா்.

பின்னா் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் மாவட்டத்தின் பல்வேறு இசைப் பள்ளிகள், கல்வி நிறுவனங்களிலிருந்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தமிழிசைப் பாடல்களைப் பாடி பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்தனா். இசை ஆசிரியா்கள் அரவிந்தாக்சன், மணிகண்டன் ஆகியோா் பாரதியாா், பாரதிதாசன், பெரியசாமி தூரன், சுத்தானந்த பாரதியாா், மதுரை சோமுவினுடைய பாடல்களைப் பாடினா். விழாவில் இசை திறமையை

வெளிப்படுத்தியவா்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சங்கச் செயலா் சிவாய ராமலிங்கம் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT