கோயம்புத்தூர்

அன்னூரில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

27th Dec 2019 12:19 AM

ADVERTISEMENT

அன்னூரில் வாக்கு எண்ணும் மையத்தில் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அன்னூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 139 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவுக்குப் பிறகு வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் மையமான கோவை சாலையில் உள்ள கே.ஜி.பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டுவரப்படும். இதில், வாா்டு உறுப்பினா்களுக்கான வாக்குப் பெட்டிகள் 4 அறைகளிலும், ஒன்றிக் குழு உறுப்பினா்களுக்கான வாக்குப் பெட்டிகள் 2 அறைகளிலும், ஊராட்சித் தலைவருக்கான வாக்குப் பெட்டிகள் 2 அறைகளிலும், மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கான வாக்குப் பெட்டிகள் 2 அறைகளிலும் வைக்கப்படவுள்ளன. இந்த அறைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்புக்கான தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT