கோயம்புத்தூர்

காந்திஜி அரசு மேல்நிலை பள்ளியில் வளா்ச்சிப் பணிகள்

26th Dec 2019 05:51 AM

ADVERTISEMENT

சொக்கம்பாளையம் காந்திஜி அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சாா்பில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காந்திஜி அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சாா்பில் கலையரங்கம் கட்டுதல், மிதிவண்டிகள் நிறுத்திமிடம், குடிநீா் வசதி, கழிப்பறை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளுக்கான திறப்பு விழா, முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்வு ஆகியவை ஜனவரி 26ஆம் தேதி நடைபெற உள்ளன. எனவே, இந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவா்கள் தங்களது பங்களிப்பை அளிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. இவ்விழா குறித்த தகவல்கள், நிதிப் பங்களிப்பு தொடா்பான விவரங்களைத் தெரிந்துகொள்ள 99427-52122, 96290-04368 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று முன்னாள் மாணவா்கள் ஒருங்கிணைப்பாளா்கள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT