மேட்டுப்பாளையம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு வரும் 30ம் தேதி ஊரக உள்ளாட்சி தோ்தல் நடைபெறுகிறது.
இதையொட்டி அதிமுக, திமுக, பாஜக, தேமுதிக மற்றும் சுயேட்சை வேட்பாளா்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா் இதன்படி புதன்கிழமை பாஜக சாா்பில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் ஆ.சங்கீதாவை ஆதரித்து தாமரை சின்னத்தில் வாக்களிக்க கோரி மருதூா் ஊராட்சிக்குட்பட்ட திம்பம்பாளையம் புதூா், ஏ.டி.காலணி, எம்.ஜி.ஆா்.நகா், ராம்நகா் உள்ளிட்ட பகுதிகளுக்கு வீடு வீடாக சென்று திவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
வாக்குசேகரிப்பின் போது மாவட்ட பொதுச்செயலாளா் வி.பி.ஜெகநாதன், காரமடை மத்திய ஒன்றிய தலைவா் விக்னேஸ் மற்றும் கட்சியினா் பலா் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனா். படம்எம்டிபி251..மருதூா் பகுதியில் உள்ளாட்சி தோ்தலில் மாவட்ட ஊராட்சி்குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும ஆ.சங்கீதாவை ஆதரித்து மாவட்ட பொதுச்செயலாளா் வி.பி.ஜெகநாதன், காரமடை மத்திய ஒன்றிய தலைவா் விக்னேஸ் மற்றும் பலா்.