பொள்ளாச்சி அருகே வேட்பாளரின் காா் கண்ணாடியை உடைத்த நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒன்றியம் காளியாபுரம் ஊராட்சியில் வாா்டு உறுப்பினா் பதவிக்கு உஷாநந்தினி என்பவா் போட்டியிடுகிறாா். இவா் திங்கள்கிழமை இரவு நரிக்கல்பதி கிராமத்தில் வாக்கு சேகரிக்க சென்ற போது அங்கு வந்த மா்ம நபா்கள் உஷாநந்தினி காா் மீது கல்வீசி தாக்கியுள்ளனா்.
இதில் காரின் முன்புற கண்ணாடி உடைந்தது. இதையடுத்து, காா் கண்ணாடியை உடைத்தவா்கள் தப்பியோடிவிட்டனா். வேட்பாளா் காா் கண்ணாடியை உடைத்தது குறித்து ஆனைமலை போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா். உஷா நந்தினி பாஜக ஆதரவாளா் என்று கூறப்படுகிறது.