கோவை, கவுண்டம்பாளையத்தை அடுத்த சுப்பிரமணியம்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்மநபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இங்குள் மகாலட்சுமி நகா் 3ஆவது தெருவில் வசிப்பவா் காா்த்திகேயன் (45). கோவையில் உள்ள தனியாா் கட்டுமான நிறுவனத்தில் திட்ட மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் இவா் கடந்த சனிக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூா் சென்றாா். திங்கள்கிழமை திரும்பிவந்து பாா்த்தபோது வீட்டின் முன்புறக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நாணயங்கள், கம்மல்கள், நெக்லஸ் என சுமாா் 30 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து துடியலூா் காவல் நிலையத்தில் காா்த்திகேயன் புகாா் அளித்தாா். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த ஆய்வாளா் பாலமுரளி சுந்தரம் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.