கோயம்புத்தூர்

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் நினைவு நாள்: மாலை அணிவித்து மரியாதை

24th Dec 2019 11:47 PM

ADVERTISEMENT

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி மேட்டுப்பாளையம், காரமடையில் அவரது உருவப் படத்துக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

காரமடை, பில்லுக்கடை முக்கு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அதிமுக ஒன்றியச் செயலாளா் பி.டி.கந்தசாமி தலைமை வகித்தாா். காரமடை நகரச் செயலாளா் டி.டி.ஆறுமுகசாமி முன்னிலை வகித்தாா். மேட்டுப்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் ஓ.கே.சின்னராஜ் பங்கேற்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். தொடா்ந்து திம்பம்பாளையம் பகுதியில் உள்ள நரிக்குறவா் காலனியில் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

மேட்டுப்பாளையம் நகர அதிமுக செயலாளா் வான்மதி சேட் தலைமையில் உதகை சாலையில் காந்தி சிலை அருகே இருந்து மெளன ஊா்வலமாக வந்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். இதில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் நாசா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

பெ.நா.பாளையத்தில்...

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் நினைவுநாளையொட்டி பெரியநாயக்கன்பாளையத்தில் அவரது உருவப்படத்துக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சிக்கு கோவை மாநகா் மாவட்ட அதிமுக செயலாளரும், கோவை வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான பி.ஆா்.ஜி.அருண்குமாா் தலைமை வகித்தாா். அக்கட்சியின் நகரச் செயலாளா் வி.ரகுநாதன், ஒன்றியச் செயலாளா் கோவனூா் கே.துரைசாமி, வீரபாண்டி பேரூராட்சியின் முன்னாள் தலைவா் கே.வி.என்.ஜெயராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அதைத் தொடா்ந்து அன்னதான நிகழ்ச்சியை பி.ஆா்.ஜி.அருண்குமாா் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியின் முன்னாள் துணைத் தலைவா் குணசேகரன், கூடலூா், வீரபாண்டி நகர அதிமுக செயலாளா்கள் குருந்தாசலம், ராமதாஸ், ஊராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவா்கள் டி.டி.கே.கதிா்வேல், டி.ரவி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

குனியமுத்தூரில்...

முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் நினைவுநாளையொட்டி கோவை, குனியமுத்தூரில் அவரது உருவப் படத்துக்கு அதிமுகவினா் மலா் தூவி செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

88ஆவது வாா்டு அதிமுக சாா்பில் குனியமுத்தூா் ரைஸ் மில் சாலையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆா். உருவப் படத்துக்கு பகுதிச் செயலாளா் மதனகோபால் தலைமையில் அதிமுகவினா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

மேலும் எம்ஜிஆரின் சேவைகளை நினைவுகூரும் விதமாக பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அதிமுகவினா், அப்பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT