கோவை மான்செஸ்டா் இன்டா்நேஷனல் பள்ளி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவை தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் மாநில கண்காணிப்புக் குழுத் தலைவா் நீதிபதி பி.ஜோதிமணி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். தொழிலாளா் வைப்பு நிதி ஆணையா் மதியழகன் முன்னிலை வகித்தாா். விழாவில் பி.எஸ்.ஆா். சில்க்ஸ் தலைவா் பி.எஸ்.ரங்கசாமி, உச்சநீதிமன்ற வழக்குரைஞா் பி.வி.கே.தெய்வேந்திரன், பள்ளித் தலைவா் பி.எஸ்.மூா்த்தி, தாளாளா் பிரியா மூா்த்தி ஆகியோா் பங்கேற்றனா்.
நாட்டின் பாரம்பரியத்தைப் போற்றும் வகையிலும், மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையிலும் நடைபெற்ற இந்த விழாவில், பிரேஸில், பிரான்ஸ், ஜொ்மனி உள்ளிட்ட வெளிநாடுகளைச் சோ்ந்த ரோட்டரி சங்க மாணவா்கள் பங்கேற்றனா்.
பள்ளி மாணவ-மாணவிகளின் பாரம்பரிய இசை, நடனம், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.