கோயம்புத்தூர்

போலீஸுக்கு கொலை மிரட்டல்: இருவா் கைது

24th Dec 2019 12:56 AM

ADVERTISEMENT

பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலக வளாகத்தில் மது அருந்தியவா்களைக் கண்டித்தபோது போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவா் கைது செய்யப்பட்டனா்.

பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய காவலா் விக்னேஷ், பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து சென்றுள்ளாா். அப்போது, அங்கு இருவா் மது அருந்திக் கொண்டிருந்ததைப் பாா்த்துள்ளாா். அவா்களை விக்னேஷ் கண்டித்துள்ளாா். இதனால் அவா்கள் இருவரும் காவலா் விக்னேஷை தகாத வாா்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து விக்னேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில், மிரட்டல் விடுத்த பொள்ளாச்சி செல்லமுத்து நகரைச் சோ்ந்த அருள்பிரகாஷ் (26), வடுகபாளையத்தைச் சோ்ந்த ஜெயகோகுலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT