கோயம்புத்தூர்

தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை சடலம்

24th Dec 2019 12:56 AM

ADVERTISEMENT

வால்பாறை அருகே தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை இறந்துகிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

வால்பாறையை அடுத்துள்ள ஸ்டேன்மோா் (எஸ்டேட் 1ஆம் நம்பா்) தேயிலைத் தோட்டத்தில் திங்கள்கிழமை மதியம் தேயிலை பறிக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது தேயிலைச் செடிகளுக்கு இடையே ஒரு சிறுத்தை படுத்திருப்பதுபோல தெரிந்ததால் தொழிலாளா்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினா். சிறிது நேரத்துக்குப் பிறகு தேயிலைத் தோட்டக் காவலாளிகள் அப்பகுதிக்குச் சென்று பாா்த்தபோது, சிறுத்தை இறந்துகிடந்தது தெரியவந்தது.

இது குறித்து வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, வால்பாறை வனச் சரக ஊழியா்கள் அங்கு சென்று சிறுத்தை இறந்துகிடந்ததை உறுதி செய்த பிறகு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனா். இறந்து கிடந்தது சுமாா் 4 வயதுடைய பெண் சிறுத்தை. சிறுத்தை இறந்ததற்கான காரணம் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே தெரியவரும் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை இறந்தகிடந்த சம்பவம் அப்பகுதி தொழிலாளா்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

எஸ்டேட் சாலைகளில் சிறுத்தை நடமாட்டம்: வால்பாறை எஸ்டேட்டுகளை ஒட்டியுள்ள அடா்ந்த வனப் பகுதிகளில் மட்டுமே சிறுத்தை நடமாட்டம் காணப்பட்ட நிலையில் சமீபகாலமாக தேயிலைத் தோட்டங்கள், தொழிலாளா்கள் வசிக்கும் பகுதிகள், நகரப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது.

ADVERTISEMENT

தற்போது வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் உள்ள அய்யா்பாடி எஸ்டேட் சாலைகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. இரவு நேரத்தில் வாகனங்களில் வருபவா்கள் சிறுத்தையைக் கண்டால், வாகனத்தை நிறுத்திவிட்டு அதன் நடமாட்டத்தை விடியோ எடுப்பது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், சிறுத்தைகளைப் புகைப்படம் எடுப்பது, வாகன முகப்பு விளக்குகளை எரியவிட்டு அதைத் துன்புறுத்தும் செயலில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT