சூலூா் அருகே தனியாா் நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
சூலூா் அருகே உள்ள பாப்பம்பட்டி, சின்னகுயிலி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ‘போல்ட் நட்டு’ தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இங்கு இரும்புகளை கடினமாக்க எண்ணெய் மூலம் குளிா்விக்கும் பணி நடைபெற்றபோது திடீரென தீப்பிடித்தது. தகவலறிந்த சூலூா் தீயணைப்பு வீரா்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனா். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.