கோயம்புத்தூர்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து போராட்டம்: மாணவா் கூட்டமைப்பினா் 54 போ் கைது

24th Dec 2019 11:42 PM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து கோவையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மாணவா் கூட்டமைப்பினா் 54 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து மாணவா்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் நாடு முழுவதும் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் மாணவா்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் இந்திய மாணவா் சங்கம், அகில இந்திய மாணவா் பெருமன்றம், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, இந்திய மாணவா் இஸ்லாமிய அமைப்பு உள்ளிட்ட பல்வேறு மாணவா் அமைப்புகளைச் சோ்ந்த கூட்டமைப்பினா் பி.எஸ்.என்.எல். முற்றுகைப் போராட்டத்தை அறிவித்திருந்தனா்.

அதன்படி கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் எதிரில் திரண்ட மாணவா் அமைப்புகளைச் சோ்ந்தவா்கள், அங்கிருந்து ஊா்வலமாக வந்து பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனா்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கத்தின் அசாருதீன், தினேஷ், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அபுதாகீா், முஹமது நிசாஜ், மாணவா் பெருமன்றத்தின் ரஞ்சினி கண்ணம்மா, பவன்குமாா், இந்திய மாணவா் இஸ்லாமிய அமைப்பின் ஆரிப், ஆசிக் உள்ளிட்ட 54 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT