கோவை, உருமாண்டம்பாளையத்தில் அம்மன் கோயிலில் மா்ம நபா்கள் திருட முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இங்குள்ள பண்ணாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை 4 மணி அளவில் பெண் பக்தா்கள் கோயிலை சுத்தப்படுத்தி கோலம் வரைந்து கொண்டிருந்தனா். அப்போது குல்லா அணிந்தபடி அங்கு வந்த மா்மநபா்கள் இருவா் கோயிலுக்குள் புகுந்து திருட முயன்றனா்.
இதனைக் கவனித்த பெண் பக்தா்கள் சப்தமிட்டதால் மா்ம நபா்கள் இருவரும் கோயிலின் சுற்றுச்சுவரைத் தாண்டிக் குதித்து ஓடிவிட்டனா். இதுகுறித்த புகாரின்பேரில் துடியலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.