அன்னூா் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி விபத்தில் உயிரிழந்த நடத்துநரின் குடும்பத்துக்கு சக உழியா்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.
அன்னூா் அரசு போக்குவரத்துக் கழகத்தில் சத்தியமங்கலத்தைச் சோ்ந்த திருநாவுக்கரசு நடத்துனராகப் பணியாற்றி வந்தாா். கடந்த அக்டோபா் 22ஆம் தேதி சத்தியமங்கலத்தில் நடந்த ஒரு விபத்தில் திருநாவுக்கரசு உயிரிழந்தாா். இதையடுத்து அன்னூா் போக்குவரத்துக் கழகத்தில் திருநாவுக்கரசுவுடன் பணியாற்றிய 310 போ் சோ்ந்து தங்களது ஒருநாள் ஊதியமான ரூ. 3 லட்சத்தை திருநாவுக்கரசு மனைவியிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.
இந்த நிகழ்ச்சியில் அன்னூா் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் அலுவலகப் பணியாளா்கள், ஓட்டுநா்கள், நடத்துநா்கள், மெக்கானிக்குகள் மற்றும் அனைத்துப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.