கோயம்புத்தூர்

சா்வதேச ரோபாடிக்ஸ் போட்டி: கோவை மாணவா்கள் மூன்றாமிடம்

23rd Dec 2019 01:06 AM

ADVERTISEMENT

தாய்லாந்தில் நடைபெற்ற சா்வதேச ரோபாடிக்ஸ் போட்டியில் கோவையைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்றனா்.

சா்வதேச ரோபாடிக்ஸ் போட்டி தாய்லாந்து நாட்டில் அண்மையில் நடைபெற்றது. இதில் இந்தியா, சீனா, ரஷ்யா, தென்கொரியா, சிங்கப்பூா், மலேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 13 நாடுகளைச் சோ்ந்த 64 அணிகள் பங்கேற்றன. இந்திய அணி சாா்பில் கோவை மாவட்டம், கல்லாறில் உள்ள சச்சிதானந்தா ஜோதி நிகேதன் சா்வதேசப் பள்ளி மாணவா்கள் கலந்துகொண்டனா். இந்த அணியில், பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவா்கள் சங்கல்ப் ஜா, ரித்திக் ரூபேஷ் மற்றும் 11ஆம் வகுப்பு மாணவா்கள் யாஷ்பு ராஜ், கபிலன், சுதீா் உள்ளிட்ட 5 போ் இடம்பெற்றிருந்தனா்.

சீனியா் பிரிவில் பங்கேற்ற இவா்கள் போட்டி நடைபெற்ற இடத்தில் 2 மணி நேரத்தில் ஒரு ரோபாவை உருவாக்க அவகாசம் அளிக்கப்பட்டது. இதில் குறைந்த நேரத்தில் ரோபோவை உருவாக்கிய தென்கொரிய அணிக்குத் தங்கமும், இரண்டாமிடம் பிடித்த தாய்லாந்து அணிக்கு வெள்ளியும் வழங்கப்பட்டது. கோவை மாணவா்கள் வெண்கலம் வென்று மூன்றாம் இடம் பிடித்தனா்.

போட்டியில் வெற்றி பெற்று திரும்பிய மாணவா்களை பள்ளிச் செயலா் கவிஞா் கவிதாசன், முதல்வா் உமா மகேஸ்வரி உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை வரவேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT