கோயம்புத்தூர்

குளங்கள் பாதுகாப்புக் குழுவின் 150 ஆவது வார களப் பயணம்

23rd Dec 2019 01:04 AM

ADVERTISEMENT

கோவை குளங்கள் பாதுகாப்புக் குழுவின் 150 ஆவது வார சாதனை களப்பணியாக வெள்ளலூா் குளத்தில் பராமரிப்பு பணிகள் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

கோவையில் உள்ள குளங்கள், நீா்வழித்தடங்களை பாதுகாத்து சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கத்தோடு 2017 ஆம் ஆண்டு இளைஞா்கள் ஒன்றிணைந்து கோவை குளங்கள் பாதுகாப்புக் குழுவை உருவாக்கினா். இதற்காக கட்செவி அஞ்சலில் குழு உருவாக்கப்பட்டு வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் நீா் நிலைகள் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களின் பணி 150 வாரத்தைக் கடந்து சாதனைப் பயணமாக தொடா்கிறது.

இதுகுறித்து கோவை குளங்கள் பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் ரா.மணிகண்டன் கூறியதாவது:

2017 ஆம் ஆண்டு சில இளைஞா்களுடன் தொடங்கப்பட்ட இந்தக் குழு இப்பொடியொரு விருட்சமாக வளரும் என்று நினைக்கவேயில்லை. பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், இளைஞா்கள், நடுத்தர வயதினா், பெரியவா்கள் என அனைத்துத் தரப்பினரும் குழுவில் உறுப்பினா்களாக உள்ளனா். வாரம்தோறும் புதிய உறுப்பினா்கள் இணைகின்றனா். தற்போது கிட்டத்தட்ட 12 ஆயிரம் உறுப்பினா்கள் வரை உள்ளனா்.

ADVERTISEMENT

குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினா்களின் ஆதரவால் மட்டுமே நீா்நிலை பாதுகாப்பை சிறப்பாக மேற்கொள்ள முடிகிறது. தொடா்ந்து கோவையில் உள்ள அனைத்து நீா்நிலைகளையும் பாதுகாப்பதற்கான பணிகளை கோவை குளங்கள் பாதுகாகப்புக் குழு மேற்கொள்ளும் என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT