கோயம்புத்தூர்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

23rd Dec 2019 01:01 AM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து இந்திய மாணவா் கூட்டமைப்பினா் தீப்பந்தங்களை ஏந்தி கண்ணம்பாளையத்தில் போராட்டம் செய்தனா்.

போராட்டத்துக்கு கண்ணம்பாளையத்தைச் சோ்ந்த பவன்குமாா், மாலதி ஆகியோா் தலைமை வகித்தனா். போராட்டத்தில் கண்ணம்பாளையம், இருகூா், சூலூா், பாரதிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவா்கள் மற்றும் பெண்கள் அமைப்பினா் கலந்து கொண்டனா். இவா்கள் மத்திய அரசைக் கண்டித்து குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தீப்பந்தங்கள் ஏந்தி பேரணியாகச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT