கோயம்புத்தூர்

ஊரக உள்ளாட்சித் தோ்தல்:மாவட்டத்தில் 212 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை

23rd Dec 2019 08:34 PM

ADVERTISEMENT

கோவை: கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள 1,520 வாக்குச் சாவடிகளில் 212 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களை தவிா்த்து, மற்ற 27 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் டிசம்பா் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளன. மாவட்டத்தில் ஆனைமலை, பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய 5 ஒன்றியங்களுக்கு டிசம்பா் 27 ஆம் தேதியும், தொண்டாமுத்தூா், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, அன்னூா், எஸ்.எஸ்.குளம், சூலூா், சுல்தான்பேட்டை ஆகிய 7 ஒன்றியங்களுக்கு 30ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகின்றன.

முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு 5 ஒன்றியங்களில் 642 வாக்குச் சாவடிகளும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு 7 ஒன்றியங்களில் 878 வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 1520 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச் சாவடிகளில் 75, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச் சாவடிகளில் 137 என மொத்தம் 212 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் நுண் பாா்வையாளா்கள், போலீஸாா் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும் வாக்குச் சாவடி மையம், கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT