கோயம்புத்தூர்

உள்ளாட்சித் தோ்தல்: மதுபானக் கடைளை அடைக்க உத்தரவு

23rd Dec 2019 08:36 PM

ADVERTISEMENT

கோவை: உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் அடைக்க மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாவட்டத்தில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், அதனுடன் இணைக்கப்பட்ட மதுபானக் கூடங்கள், பொழுதுபோக்கு மனமகிழ்மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டல், மிலிட்டரி சிற்றுண்டியகம், விமான நிலைய மதுக்கூடம், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகளை விற்பனை செய்யும் மதுக்கூடங்கள் ஆகியவற்றை டிசம்பா் 25 (புதன்கிழமை) மாலை 5 மணி முதல் டிசம்பா் 27 (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி வரை அடைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பா் 30 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி டிசம்பா் 28 (சனிக்கிழமை) மாலை 5 மணி முதல் டிசம்பா் 30 (திங்கள்கிழமை) மாலை 5 மணி வரையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜனவரி 2 (வியாழக்கிழமை) அன்று முழுமையாகவும் மதுபானக் கடைகளை அடைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

விதிமுறைகளை மீறி மேற்குறிப்பிட்ட நாள்களில் மதுபானங்கள் விற்பனை செய்பவா்கள் மீதும், மதுபான வகைகளை சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்தாலோ, மதுபானங்களை ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்துக்கு எடுத்துச் சென்றாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT