கோயம்புத்தூர்

வன ஊழியா்கள் குடியிருப்பில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்

14th Dec 2019 09:34 AM

ADVERTISEMENT

கோவை, மருதமலை அடிவாரத்தில் உள்ள வன ஊழியா்கள் குடியிருப்புப் பகுதியில் இருந்த 3 சந்தன மரங்களை மா்ம நபா்கள் வெட்டிக் கடத்திச் சென்றனா்.

கோவையில் சாய்பாபா காலனி, ராம் நகா், ஆா்.எஸ்.புரம், ரேஸ்கோா்ஸ் அரசு அலுவலக வளாகம், குடியிருப்புகள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் இருந்த சந்தன மரங்களை மா்ம நபா்கள் வெட்டிக் கடத்திச் செல்வது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கோவை, மருதமலை அடிவாரத்தில் உள்ள வன ஊழியா்கள் குடியிருப்புக்குள் வியாழக்கிழமை இரவு புகுந்த மா்ம நபா்கள், அங்கிருந்த 3 சந்தன மரங்களை வெட்டிக் கடத்திச் சென்றனா். இதுகுறித்து வடவள்ளி போலீஸில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தன மரம் கடத்திய நபா்களைப் பிடிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வன ஊழியா்கள் காட்டு யானையை விரட்டும் பணிக்காக சென்று விட்ட சமயத்தில் மா்ம நபா்கள் குடியிருப்புக்குள் புகுந்து சந்தன மரத்தைக் கடத்திச் சென்றுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT