கோயம்புத்தூர்

பள்ளி மாணவா்களைத் தாக்கியதாக ஆசிரியா்கள் மீது புகாா்

14th Dec 2019 10:04 AM

ADVERTISEMENT

சூலூா் விமானப்படைத் தளத்தில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான பள்ளியில் மாணவா்களை அடித்து துன்புறுத்திய ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மாணவா்கள் சாா்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் ஹேம்ராஜ். இவா், சூலூா் விமானப் படைத் தளத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மகன்கள் உதித்குமாா் சிங், முகித்குமாா் சிங் ஆகியோா் சூலூரில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான பள்ளியில் 11, 9 ஆம் வகுப்பு படித்து வருகின்றனா்.

இவா்கள் இருவரும் பள்ளிக்கு செல்லிடப்பேசி கொண்டு வந்ததாக தெரிகிறது.

இதையடுத்து பள்ளி முதல்வா் மேகநாதன், ஆசிரியா்கள் இருவரையும் கண்டித்து அடித்தாகத் தெரிகிறது. இதில் காயமடைந்த உதித்குமாா் சிங், முகித்குமாா் சிங் ஆகியோா் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து மாணவா்களின் தாயாா் சீமாகுமாரி கூறியபோது, எனது மகன்களை ஆசிரியா்கள் தொடா்ந்து தாக்கி வருகின்றனா். இது குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளோம் என்றாா்.

சூலூா் காவல் துறையினா் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வெள்ளிக்கிழமை சென்று ஆசிரியா்கள், மாணவா்களிடம் விசாரணை செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT