கோயம்புத்தூர்

சூலூா் வட்டாரத்தில் ஒரே நாளில் 366 போ் வேட்புமனு தாக்கல்

14th Dec 2019 10:05 AM

ADVERTISEMENT

சூலூா், சுல்தான்பேட்டை ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட வெள்ளிக்கிழமை 366 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா். இதில் சூலூா் ஒன்றியத்தில் 249 பேரும், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 117 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பெ.நா.பாளையத்தில்...

பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்குப் போட்டியிட 166 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

வெள்ளிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 2 பேரும், ஒன்றிய கவுன்சிலா் பதவிக்கு 11 பேரும், ஊராட்சித் தலைவா் பதவிக்கு 14 பேரும், ஊராட்சி வாா்டு கவுன்சிலா் பதவிக்கு 139 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT