கோயம்புத்தூர்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து ஆா்ப்பாட்டம்

14th Dec 2019 09:47 AM

ADVERTISEMENT

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சஜித் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் முஸ்தபா, பொருளாளா் அப்துல் சத்தாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் மாநில பேச்சாளா் ஜமால் உஸ்மானி பேசுகையில், ‘தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது. மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தக் கூடாது என அரசியல் சாசனத்தில் உள்ளது.

இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் நாட்டுக்கு எவ்வித நன்மையும் ஏற்பட போவதில்லை. முஸ்லிம்களின் உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசின் போக்கு நாட்டை மதரீதியில் பிளவுபடுத்துவது ஆகும்’ என்றாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT