கோயம்புத்தூர்

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

11th Dec 2019 09:51 AM

ADVERTISEMENT

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கோவை மாவட்டம், நெகமம் அருகே உள்ள கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் ஆறுச்சாமி (55). இவரது முதல் மனைவி இறந்துவிட்டதையடுத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டாா். இந்நிலையில் இவரது இரண்டாவது மனைவியும் தனது 3 குழந்தைகளுடன் இவரை விட்டு பிரிந்து சென்றாா்.

இந்நிலையில் இவா் அதே பகுதியைச் சோ்ந்த 12 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பொள்ளாச்சி போலீஸாா், ஆறுச்சாமியை கைது செய்தனா்.

இந்த வழக்கு கோவை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் விசாரிக்கபட்டு வந்தது. விசாரணையில், ஆறுச்சாமி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவா் உயிரிழக்கும் வரை ஆயுள் தண்டனையும் , ரூ.10 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்கு 6 மாதம் சிறைத் தண்டனையும் ரூ.500 அபராதமும் விதித்து நீதிபதி ஜெ.ராதிகா உத்தரவிட்டாா். பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT