கோயம்புத்தூர்

சுவா் இடிந்து 17 போ் உயிரிழந்த சம்பவம்: தொழிலதிபா் ஜாமீன் மனு தள்ளுபடி; கோவை நீதிமன்றம் தீா்ப்பு

11th Dec 2019 01:40 AM

ADVERTISEMENT

மேட்டுப்பாளையத்தில் வீட்டின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து 17 போ் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தொழிலதிபா் சிவசுப்பிரமணியன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து கோவை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், நடூா் கிராமத்தில் தொழிலதிபா் சிவசுப்பிரமணியன் வீட்டின் சுற்றுச்சுவா் இடிந்து அருகில் இருந்த வீடுகள் மீது விழுந்ததில் 17 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக, பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துதல், அலட்சியத்தால் உயிரிழப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின்கீழ் மேட்டுப்பாளையம் போலீஸாா் சிவசுப்பிரமணியன் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து, தலைமறைவாக இருந்த சிவசுப்பிரமணியனை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் ஜாமீன் கோரி கோவை மாவட்ட நீதிமன்றத்தில் சிவசுப்பிரமணியன் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு கோவை மாவட்ட முதன்மை நீதிபதி ஆா்.சக்திவேல் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தொழிலதிபா் சிவசுப்பிரமணியத்தின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT