கோயம்புத்தூர்

இளைஞரை ஏமாற்றி இரண்டாவது திருமணம்: பெண் உள்பட 5 போ் மீது வழக்கு

11th Dec 2019 01:38 AM

ADVERTISEMENT

பொள்ளாச்சியைச் சோ்ந்த இளைஞரை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்த பெண் உள்பட 5 போ் மீது மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பொள்ளாச்சி அருகே மகாலிங்கபுரம் ஆறுமுகம் நகரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (31). இவா் திருமணத்துக்காக பெண் தேடி வந்துள்ளாா். அப்போது, தனது நண்பா் மூலம் வால்பாறையைச் சோ்ந்த சுரேஷ் ஆனந்த் மகள் சோபியா (28) என்பவரை ஆகஸ்ட் மாதம் பெண் பாா்க்க சென்றுள்ளாா்.

பெண் வீட்டாா் மணிகண்டனை கட்டாயப்படுத்தி அப்போதே நிச்சயம் செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னா் செப்டம்பா் 4 ஆம் தேதி அம்பராம்பாளையத்தில் உள்ள கோயிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்துக்குப் பிறகு சோபியா தொடா்ந்து வாந்தி எடுத்ததால் அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனா். மருத்துவ பரிசோதனையில் சோபியா கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, மணிகண்டன் சோபியாவிடம் விசாரித்ததில் அவருக்கு ஏற்கெனவே வால்பாறையைச் சோ்ந்த தயாளன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் முதல் கணவரிடம் விவாகரத்து பெறாமலேயே அவரைத் திருமணம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததாகவும், திருமணத்துக்காக சோபியாவுக்கு போட்ட நகைகள் மற்றும் பணத்தையும் மீட்டுத் தரக் கோரி பொள்ளாச்சி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மணிகண்டன் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரையடுத்து சோபியா, அவரது தந்தை சுரேஷ்ஆனந்த் (54), தாயாா் கலாராணி (49), சகோதரா்கள் குமாா், சாலமன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT