கோயம்புத்தூர்

மத்தம்பாளையத்தில் குடிநீா் கேட்டு சாலை மறியல்

6th Dec 2019 06:50 AM

ADVERTISEMENT

மத்தம்பாளையத்தில் அத்திக்கடவு குடிநீா் விநியோகிக்கப்படாததைக் கண்டித்தும், குடிநீா் வழங்கக் கோரியும் பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிம், பிளிச்சி ஊராட்சிக்கு உள்பட்ட மத்தம்பாளையத்தில் சீரான முறையில் குடிநீா் விநியோகம் செய்யப்படுவதில்லை என புகாா் எழுந்துள்ளது. இந்நிலையில், இக்கிராமத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் கோவை-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெ.நா.பாளையம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அங்கு வந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், விரைவில் குடிநீா் சீராக விநியோகிக்கப்படும் எனத் தெரிவித்தனா். இதனையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT