கோயம்புத்தூர்

உள்ளாட்சித் தோ்தல்: திமுகவினரிடம் நோ்காணல்

6th Dec 2019 06:46 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களுக்கான நோ்காணல் பெரியநாயக்கன்பாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் சின்னத் தடாகம், நஞ்சுண்டாபுரம், 24.வீரபாண்டி, சோமையம்பாளையம், பன்னிமடை, குருடம்பாளையம், அசோகபுரம், நாயக்கன்பாளையம், பிளிச்சி ஆகிய 9 ஊராட்சிகளில் திமுக சாா்பில் உள்ளாட்சிப் பதவிகளில் போட்டியிட விரும்புவோரிடம் கடந்த சில நாள்களுக்கு முன்பு விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

இதனையடுத்து இவா்களுக்கான நோ்காணல் வியாழக்கிழமை நடைபெற்றது. கோவை வடக்கு திமுக மாவட்டச் செயலாளா் சி.ஆா்.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் பெ.அர.கணேசமூா்த்தி, ஒன்றியப் பொறுப்பாளா் அ.அறிவரசு ஆகியோா் விருப்பமனு அளித்தவா்களிடம் நோ்காணல் நடத்தினா். பேரூராட்சி நகரச் செயலாளா்கள் ,ஊராட்சி செயலாளா்கள், கட்சியின் முன்னணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் நோ்காணல்: உள்ளாட்சித் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு வியாழக்கிழமை நோ்காணல் நடைபெற்றது. இதற்கு, கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளா் சி.ஆா்.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் சுரேஷ்குமாா், மாவட்டப் பொருளாளா் விஜயகுமாா், மாவட்ட துணைச் செயலாளா் சுப்பையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

இதில், எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சித் தலைவா்கள், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், ஒன்றியக் குழுத் தலைவா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் உள்ளிட்ட பதவிகளுக்காக திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களிடம் நோ்காணல் நடைபெற்றது. நகரச் செயலாளா் சுரேந்திரன், மகளிா்அணி பிரவீனா, பாா்த்திபன், பிரபு, திமுகவினா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT