கோயம்புத்தூர்

பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் தொடக்கம்

29th Aug 2019 07:13 AM

ADVERTISEMENT

கோவை பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
புதிய ஆதார் எண் பெறுதல், ஆதார் அட்டையைப் புதுப்பித்தல், பிழை திருத்தம் செய்தல், செல்லிடப்பேசி எண், வீட்டு முகவரி மாற்றம் செய்தல் போன்ற ஆதார் தொடர்பான அனைத்து பணிகளுக்காகவும் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையங்களில் ஆதார் சேவை மையம் தொடங்கப்படுகிறது. 
முதல்கட்டமாக ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். தந்தி அலுவலக வளாகத்தில் ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. 
இந்த மையத்தை முதன்மைப் பொது மேலாளர் ஜி.முரளீதரன் தொடக்கி வைத்தார். இதேபோன்ற சேவை மையங்கள் அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்களிலும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
இங்கு, புதிய ஆதார் எண்ணை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஆதார் அட்டை பதிவிறக்கம், அச்சிடுதல், செல்லிடப்பேசி எண், முகவரி மாற்றம் செய்தல் போன்றவற்றுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் பி.எஸ்.என்.எல். தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT