கோயம்புத்தூர்

முதல்வரின் சிறப்பு குறைதீர் கூட்டம்

28th Aug 2019 10:18 AM

ADVERTISEMENT

 கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், அந்தியூர் சட்டப் பேரவை உறுப்பினர் ராஜாகிருஷ்ணன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றனர். பொதுமக்களின் குறைகளை
க் கேட்டறிந்து தீர்வு காணப்படும் எனத் தெரிவித்தனர்.
இதில், சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தனர்.

சசூரி கல்லூரியில் கணிதத் திறன் போட்டி
பெருந்துறை, ஆக. 27: பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், நடுப்பட்டி, சசூரி கலை அறிவியல் கல்லூரியின் கணிதத் துறை சார்பில், கல்லூரிகளுக்கு இடையேயான கணிதத் திறன் போட்டிகள் செவ்வாய்கிழமை நடைபெற்றன. 
விழாவில், கல்லூரித் தலைவர் அ.மு.கந்தசுவாமி தலைமை வகித்தார். முதல்வர்  சு.விமல் ஆனந்த், கல்லூரி ஆலோசகர் டி.தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
விழாவையொட்டி, மாணவர்களுக்கு இடையே கணித ரங்கோலி, மைமிங், மாற்றியோசி, மேத்ஸ்ஹெட்சிங், ஓவியம், மெஹந்தி உள்பட பல்வேறு விதமான கணிதம் சார்ந்த போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டிகளில், 20 க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 400 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கணிதத் துறைத் தலைவர் மு.பிரதாப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கினர்.  
இதில், கல்லூரிகளின் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, 
மாணவிகள் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT