ஈரோடு மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் பெருந்துறை வட்டார வள மையத்தின் சார்பில், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. முகாமில், பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பங்கேற்று மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட கல்வி அலுவலர் ராமன், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் துளசிமணி, ஒன்றிய அதிமுக செயலாளர் விஜயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.