கோயம்புத்தூர்

தொழிலாளர் நலத் துறையில் ரூ.3.12 கோடி நலத்திட்ட உதவி

28th Aug 2019 10:00 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் தொழிலாளர் நலத் துறை சார்பில் கடந்த ஆண்டு ரூ.3 கோடியே 12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 
 இதுதொடர்பாக கோவை மாவட்ட தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவை மாவட்டத்தில் தொழிலாளர் நலத் துறை சார்பில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு உதவித் தொகை, ஓய்வூதியம் என பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த 2018 -19 ஆம் ஆண்டில் கோவை மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கல்வி உதவித் தொகை திட்டத்தில் 5 ஆயிரத்து 763 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 7 லட்சத்து 26 ஆயிரத்து 900, திருமண உதவித் தொகை திட்டத்தில் ரூ.1 லட்சத்து 35 ஆயிரம், மரண உதவித் தொகை திட்டத்தில் 70 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சத்து 66 ஆயிரம், மாதாந்திர ஓய்வூதியத் திட்டத்தில் 3 ஆயிரத்து 80 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 81 லட்சத்து 60 ஆயிரம், பிற திட்டங்களை சேர்த்து மொத்தம் 9,207 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 12 லட்சத்து 40 ஆயிரத்து 400 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT