கோயம்புத்தூர்

செரயாம்பாளையத்தில் வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி போராட்டம்

23rd Aug 2019 09:18 AM

ADVERTISEMENT

கோவில்பாளையம் அருகே செரயாம்பாளையத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி  பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  எஸ்.எஸ்.குளம் ஒன்றியம், வெள்ளாணைப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட செரயாம்பாளையத்தில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் சொந்தமாக வீடு  இல்லாதவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர்.
   கடந்த சில நாள்களுக்கு முன்பு வேறு பகுதிகளைச் சேர்ந்த 36 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து, ஊராட்சிப் பகுதியில் வீடில்லாமல் இருக்கும் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்காமல் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டதைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேசிய வருவாய் 
அலுவலர் ஷாஜகான், 36 பட்டாக்கள் வழங்கயதுபோக மீதம் உள்ள காலி நிலத்தை அளவீடு செய்து தகுதியானவர்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT