கோயம்புத்தூர்

பொள்ளாச்சியில் சுதந்திர தின விழா

16th Aug 2019 07:38 AM

ADVERTISEMENT

பொள்ளாச்சியில் அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களில் சுதந்திர தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் ரவிக்குமார் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். பொள்ளாச்சி வனத் துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து, தலைமை வனப் பாதுகாவலரின் நேர்முக உதவியாளர் முரளிதரன், வனச் சரக அலுவலர் காசிலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். என்ஐஏ கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு, டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி செயலர் ராமசாமி தலைமை வகித்தார். 
கல்லூரி முதல்வர் இரத்தினவேலு தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பொள்ளாச்சி என்ஜிஎம் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பழனிசாமி தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முத்துகுமரன், வேதியியல் துறைத் தலைவர் அய்யாசாமி,  பேராசிரியர் அமுதன் உள்பட பலர் பங்கேற்றனர். 
மணக்கடவு வாணவராயர் வேளாண்மை கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் சின்னுசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். கல்லூரி இயக்குநர் கெம்புசெட்டி உள்பட பலர் பங்கேற்றனர். பொள்ளாச்சி சிம்ஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி ஆலோசகர் சுப்பிரமணியன் சுதந்திர தின உரை நிகழ்த்தினார். பேராசிரியர்கள் ஆனந்தி, சிவஞானசெல்வகுமார் உள்பட பலர் பங்கேற்றனர். 
ருக்மணியம்மாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் கல்வியில் சிறந்த மாணவி சௌமியாவின் தந்தை சிவகுமார் தேசியக் கொடியேற்றிவைத்தார்.  பொள்ளாச்சி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற பொறியாளர்கள் வெங்கடாசலம், கார்த்திகேயன் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனர். 
ஜமீன்முத்தூர் ஏஆர்பி பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளி முதல்வர் அரசு பெரியசாமி வரவேற்றார். காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ்கண்ணா தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பள்ளித் தாளாளர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். லதாங்கி வித்யா மந்திர் பள்ளியில் சுதந்திரதின நிகழ்ச்சி நடைபெற்றது. 
இதேபோல திவான்சாபுதூர் கிருஷ்ணா வித்யாலயா பள்ளி, மீனாட்சிபுரம் லட்சுமி வித்யா பவன் பள்ளி, கணபதிபாளையம் கந்தசாமி மெட்ரிக். மேல் நிலைப் பள்ளிகளில் சுதந்திர தின விழா நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT